இப்போது நமது லாப்டொப் அல்லது கணினியில மோடம் இல்லை என்றால் வை-பை மூலமா இணைப்பு ஏற்படுத்தி இணையவலையில் கலக்கின்றோம், ஆனால் 3 ஜி தொழில்நுட்பத்தில் பென்-டிரைவ் மாதிரியான ஒரு சாதனம் மூலமாக ஹை-ஸ்பீட் இன்டர்நெட் இணைப்பை பெறலாம்,"INTERNET STICK" என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தை நோக்கியா நிறுவனம் இப்போதே தயாரிக்க ஆரம்பித்து விட்டது. இந்த STICK மூலமா நாமஎங்க வேணும்னாலும் தடையில்லா ஹை-ஸ்பீட் இன்டர்நெட் வேகத்தை பெறமுடியும்
- எமது செல்லிட தொலைபெசியில் நம்முடன் கூட மறுமுனையில பேசுறவங்களோட முகத்தை பார்த்தவாறே பேசலாம்.இதை "video telephone" என்று சொல்லுவார்கள். "conference calling" வசதி இன்னும் சுலபமாகும்.
- வேகமான வீடியோ தரவிறக்கம், லைவ்டிவி, வேகமான வீடியோ ஸ்டிரீமிங், இதெல்லாம் சாத்தியமாகும்.அவ்வளவு ஏன்? உலகக்கோப்பை விளையாட்டுப்போட்டிகளை உங்கள் செல்லிடதொலைபேசியில் லாவகமாகப்பார்வையிடலாம்.
- இன்டர்நெட் ரேடியோ மூலமாக உலகத்துல இருக்குற ஆயிரக்கணக்கான பல்வேறு மொழி ரேடியோக்களை டிஜிட்டல் ஒலி தரத்தில் செல்லிடதொலைபேசியில் கேட்க முடியும்.
- சிறப்பான செல்லிடதொலைபேசி ஆன்லைன் கேமிங் அனுபவம் எமக்கு கிடைக்கும்.
- 3 ஜி வசதியுள்ள போன்களை நோக்கியா,சோனிஎரிக்சன்,சாம்சங், எல்.ஜி,ஹெச்.டி.சி, ஆப்பிள் போன்ற பல நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
- 3 ஜி வசதியை பயன்படுத்த தனி சிம்கார்டு தரப்படும், அதன் மூலம் தான் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.