Tuesday, June 9, 2009

3G

3G என்பது 3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது. சாதரணமாக 2வது தலைமுறை செல்லிட தொலைபேசிகள் இணைய வசதியை ஏற்படுத்த 30-200 KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும். குறைந்தது 144Kbps வேகம் வரை இணையவசதியை கொடுக்கும்.அதிகபட்சமா 2mbps வேகம் வரைக்கும் இணைய வசதி கிடைக்கும். இதனால் வேகமாக தரவிறக்கம் செய்ய, கோப்புகளை அனுப்ப முடியும்.

இப்போது நமது லாப்டொப் அல்லது கணினியில மோடம் இல்லை என்றால் வை-பை மூலமா இணைப்பு ஏற்படுத்தி இணையவலையில் கலக்கின்றோம், ஆனால் 3 ஜி தொழில்நுட்பத்தில் பென்-டிரைவ் மாதிரியான ஒரு சாதனம் மூலமாக ஹை-ஸ்பீட் இன்டர்நெட் இணைப்பை பெறலாம்,"INTERNET STICK" என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தை நோக்கியா நிறுவனம் இப்போதே தயாரிக்க ஆரம்பித்து விட்டது.
இந்த STICK மூலமா நாமஎங்க வேணும்னாலும் தடையில்லா ஹை-ஸ்பீட் இன்டர்நெட் வேகத்தை பெறமுடியும்
  1. எமது செல்லிட தொலைபெசியில் நம்முடன் கூட மறுமுனையில பேசுறவங்களோட முகத்தை பார்த்தவாறே பேசலாம்.இதை "video telephone" என்று சொல்லுவார்கள். "conference calling" வசதி இன்னும் சுலபமாகும்.
  2. வேகமான வீடியோ தரவிறக்கம், லைவ்டிவி, வேகமான வீடியோ ஸ்டிரீமிங், இதெல்லாம் சாத்தியமாகும்.அவ்வளவு ஏன்? உலகக்கோப்பை விளையாட்டுப்போட்டிகளை உங்கள் செல்லிடதொலைபேசியில் லாவகமாகப்பார்வையிடலாம்.
  3. இன்டர்நெட் ரேடியோ மூலமாக உலகத்துல இருக்குற ஆயிரக்கணக்கான பல்வேறு மொழி ரேடியோக்களை டிஜிட்டல் ஒலி தரத்தில் செல்லிடதொலைபேசியில் கேட்க முடியும்.
  4. சிறப்பான செல்லிடதொலைபேசி ஆன்லைன் கேமிங் அனுபவம் எமக்கு கிடைக்கும்.
  5. 3 ஜி வசதியுள்ள போன்களை நோக்கியா,சோனிஎரிக்சன்,சாம்சங், எல்.ஜி,ஹெச்.டி.சி, ஆப்பிள் போன்ற பல நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
  6. 3 ஜி வசதியை பயன்படுத்த தனி சிம்கார்டு தரப்படும், அதன் மூலம் தான் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

No comments:

Post a Comment