Friday, May 29, 2009

யுனிகோட் ஒருங்குறி

யுனிகோட் (Unicode) அல்லது ஒருங்குறி என்பது, எழுத்துக்களையும் வரியுருக்களையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமம் ஆகும்.

இந்நியமத்தில் தற்காலத்தில் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் பல்வேறு வரிவடிவங்கள் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும் வரிவடிவங்களும், கணிதம், மொழியியல் போன்ற துறைகளில் பயன்படும் சில வரியுருக்களும் அடங்கியுள்ளன.

தற்போது கணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்காக வெவ்வேறு குறிமுறைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், தமிழ் போன்ற சில மொழிகளில் ஒரே வரிவடிவத்திற்கு பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. யுனிகோடு என்பது இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம குறிமுறையை நிறுவுவதற்கான திட்டமாகும். இன்று பல்வேறு எண்முறை, கணினியியல் நிறுவனங்களும் செயற்றிட்டங்களும் ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கி இக்குறியீட்டு நியமத்திற்கான ஆதரவையும் தமது தாயாரிப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன. புதிதாக தோன்றும் நியமங்களும் யுனிகோடை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப் படுகின்றன. (எ+கா) XML

குறிமுறை நியமங்களின் வரலாற்றுப் பின்னணி

உலகளாவிய குறிமுறை நியமங்களின் வரலாறு

தமிழ் குறிமுறை நியமங்களின் வரலாறு

ஆஸ்கி (ASCII)

ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியை தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது.

தகுதரம் (TSCII)

காலப்போக்கில் இணையத்தின் (Internet) வரவால் நடைமுறைச்சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களை (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இது மாத்திரம் இன்றி பல தரவுத் தளங்களில்(Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்று கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேற்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (i.e. TSCII Tamil Standard Code for Information Interchange) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துக்கள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (i.e. ASCII - American Standard Code for Information Interchange) ஒத்தது. மிகுதியான 128-155 இல் தமிழ் எழுத்துக்கள் நிரப்பப் பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98 மற்றும் Me பதிப்புக்களில் TSCII பெரும்பாலும் பயன் படுத்தப் படுகிறது.


ஒருங்குறி (UNICODE)

ஒருங்குறியானது (யுனிக்கோடானது) ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளை ஒன்றினைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகம் ஆனது. விண்டோஸ் 2000 /XP/2003 தமிழ் ஒருங்குறி் வசதியும் அப்பிள் வகைக் கணினியில் Mac OS 10.4 இலும் தமிழ் ஒருங்குறி வசதியுள்ளது. இன்று அநேகமாக உலகில் உள்ள தேடுபொறிகள் (Search Engines) கூகிள்யாகூ ஒருங்குறியில் தேடல்கள் செய்ய வல்லன. இது மாத்திரம் அன்றி மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒருங்குறியினூடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை ஆபிஸ் 2003 மற்றும் விண்டோஸ் XP இற்கு அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது.. உலகில் உள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. மற்றும்

எண்முறை சாதனங்களில் ஒருங்குறி

கணினி

கணினி இயங்குதளங்களும் பயன்பாட்டு மென்பொருட்களும் படிப்படியாக ஒருங்குறிக்கான முழுமையான ஆதரவை வழங்கத்தொடங்கியுள்ளன.

க்னூ/லினக்ஸ் இயங்குதளம்

ஒருங்குறிப்பயன்பாட்டை ஆரம்பகாலங்களில் உள்வாங்கிக்கொண்ட இயங்குதளங்களுள் க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களும் அடங்கும். utf-8 ஒழுங்கினைப்பின்பற்றி க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களில் ஒருங்குறி கையாளப்படுகிறது. இந்த அடிப்படையே வின்டோஸ் போன்ற இயங்குதளங்கள் ஒருங்குறியை கையாளு முறைமையிலிருந்து க்னூ/லினக்ஸ் இனை வேறுபடுத்துகிறது. பழைய மென்பொருட்களிலும் ஒருங்குறி பயன்படுத்தப்படக்கூடியதாய் இருக்கவேண்டும் என்கிற பழசோடும் ஒத்திசைதல் எனும் எண்ணக்கருவினை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பகாலங்களில் utf-8 ஒழுங்கு உள்வாங்கிக்கொள்ளப்பட்டது.

க்னூ/லினக்ஸ் இல் தமிழ் ஒருங்குறிப்பயன்பாடு ஏறத்தாழ முழுமையடைந்திருக்கிறது. உலகின் முதல் தமிழ் இடைமுகப்பை கொண்ட முழுமையான இயங்குதளமாக வெளிவந்த மான்ட்ரேக் லினக்ஸ் 10.0 ஒருங்குறி ஆதரவினை கொண்டிருந்தது. ஆரம்பகால க்னூ/லினக்ஸ் இடைமுகப்பு த்மிழாக்கத்தின்போது தமிழ் கணினி வல்லுநர்கள் ஒருங்குறி அல்லாத குறிமுறைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழ் நொப்பிக்ஸ் இதற்கு நல்ல உதாரணமாகும்.

யுனிக்ஸ், சொலாரிஸ்

வின்டோஸ்

விண்டோஸ் இயங்குதளங்களில் விஸ்டாவில் தமிழ் மொழி உட்பட இந்திய மொழிகளுக்கான நேரடி ஆதரவுண்டு. புதிதாக ஒரிய மொழியானது ஒருங்குறியில் விண்டோஸ் ஆதரவளிக்கின்றது.தமிழை உத்தியோகபூர்வமாக ஆதரித்த முதலாவது விண்டொஸ் பதிப்பு விண்டோஸ் 2000 ஆகும். எ-கலப்பை மென்பொருள் தனித்தியங்கும் ஓர் ஒருங்குறி இயந்திரமொன்றைக் கொண்டுள்ளதால் கொள்கை ரீதியில் விண்டோஸ் 98 இயங்குவேண்டும்.

விண்டோஸ் 2000/XP

விண்டோஸ் XP

உங்களிடம் விண்டோஸ் XP சேவைப் பொதி 2 இருந்தால விண்டோஸ் மொழி இடைமுகப் பொதியை நிறுவிக் கொள்ளலாம்.

மாக்கின்டோஷ்

செல்பேசி

செல்பேசிகளில் ஜாவா தொழிநுட்பம் ஒருங்குறிக்கான ஆதரவை அவழங்குவதால், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாடு சாத்தியமாகியுள்ளது. தற்போது டொட் நெட் நுண்ணியக்க சூழலும், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாட்டை சாத்தியப்படுத்திவருகிறது. இலங்கையில் சண்ரெல் மடிமேற்கணினிகளில் பாவிக்கப் படும் PCMCIA CDMA தொலைபேசியும் ஒருங்குறியை ஆதரிக்கின்றது. இங்கே நேரடியா எ-கலப்பை மூலமாக தமிழில் குறுஞ்செய்திகளை தயாரிக்க முடியும்.

கணினி வலையமைப்பு

கணினி வலையமைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று தகவல் அல்லது தரவுகளைப் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் ஒரு அமைப்பு. கணினி வலையமைப்பை நிரந்தரமானது (வலையமைப்பு கம்பி இணைப்புகள்) அல்லது தற்காலிகமானது (மோடம் இணைப்புகள்) என்று மேலோட்டமாக இரு வகையாகப் பிரிக்கலாம். வலையமைப்புகளை பல பிரிவுகளில் வகைப் படுத்தலாம். கீழே அந்த பிரிவுகளைக் காணலாம்.

வலையமைப்பு வகைகள்

வலையமைப்பு அமைந்திருக்கும் பரப்பின் படி

  • தனிநபர் பரப்பு வலையமைப்புகள் (Personal Area Networks or PAN)

  • குறும்பரப்பு வலையமைப்புகள் (Local Area Network or LAN)

  • பெரும்பரப்பு வலையமைப்புகள் (Wide Area Network or WAN)

  • பெருநகர் பரப்பு வலையமைப்புகள் (Metropolitan Area Network or MAN)

வலையமைப்பின் செயல்தன்மைப் படி

  • வாடிக்கையாளர்-சேவையகம் (Client-Server)

  • பல அடுக்குக் கட்டமைப்பு (Multitier architecture)

  • சக கணினிகளுக்கிடையே தொடர்பு (peer-to-peer)

வலையமைப்பு இணைப்பு முறைப் படி

  • பாட்டை வலையமைப்பு (Bus Network)

  • விண்மீன் வலையமைப்பு (Star Network)

  • வளைய வலையமைப்பு (Ring Network)

  • கண்ணி வலையமைப்பு (Mesh Network)

  • விண்மீன்-பாட்டை வலையமைப்பு (Star-bus Network)

வலையமைப்பின் சிறப்புத் தன்மையின் படி

  • தேக்கக வலையமைப்பு (Storage Network)

  • சேவையகப் பண்ணைகள் (Server Farms)

  • செயல் கட்டுப்பாட்டு வலையமைப்பு (Process Control Network)

  • மதிப்புக் கூட்டும் வலையமைப்பு (Value Added Network)

  • சிறு மற்றும் வீட்டில் இயங்கும் அலுவலக வலையமைப்பு (SOHO Network)

  • கம்பியில்லா சமூக வலையமைப்பு (Wireless Community Network)

இணைப்பு நெறிமுறை அடுக்குகள்

கணினி வலையமைப்புக்களை செயல்படுத்த பலவகை நெறிமுறை அடுக்கு (Protocol Stack) கட்டமைப்புகளும், ஊடகங்களும் (Media) நடப்பில் உள்ளன. ஒரு கணினி வலையமைப்பை ஒன்று அல்லது பல ஊடகங்களையும், நெறிமுறை அடுக்குகளையும் இணைந்து செயல் படச் செய்து வடிவமைக்கலாம். உதாரணத்திற்குச் சில:

  • ஆர்க்நெட் (ARCnet)

  • டெக்நெட் (DECnet)

  • ஈதர்நெட் (Ethernet)

  • இண்டர்நெட் நெறிமுறை (Internet Protocol or IP)

  • போக்குவரத்து கட்டுப்பாட்டு நெறிமுறை (Transport Control Protocol or TCP)

  • பயனர் Datagram நெறிமுறை (User Datagram Protocol or UDP)

திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் (OSI Model)

பலவகை இயக்க மென்பொருள் அமைப்புகளும் (Operating Systems), வலையமைப்பிற்கான வன்பொருள் அமைப்புகளும் (Networking Hardware), நெறிமுறை அடுக்குகளும் பல்கிப் பெருகி விட்ட கணினி உலகில், கணினிகள் மற்றும் அவற்றில் இயங்கும் மென்பொருட்களை வடிவமைப்போர் சக கணினியுடன் இணைப்பு பெறும் முறை, அக் கணினியின் வன்பொருள் அமைப்பு, அதன் இயக்க மென்பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தனித்தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தேவையில்லாமல் மென்பொருட்களை வடிவமைக்க வகை செய்யவே இந்தப் படிமம் வடிவமைக்கப் பட்டது.

இந்தப் படிமத்தின் முக்கிய நோக்கங்கள்:

  • ஒரு கணினி சக கணினியுடன் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்துச் செயல்பாடுகளையும் (எந்த ஒரு குறிப்பிட்ட வன்பொருளையோ அல்லது மென்பொருளையோ சாராமல்) கண்டறிவது

  • அவற்றை ஏழு தேர்ந்தெடுத்த கட்டங்களில் வகைப் படுத்தித் தொகுப்பது

  • ஏழு கட்டங்களில் எந்த ஒரு கட்டச் செயல்பாடுகளும் சக கணினியிலுள்ள அதற்கு இணையான கட்டத்துடன் தொடர்பு கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நெறிமுறைப் படி தரவுப் பறிமாற்றம் செய்ய அதன் கீழுள்ள கட்டத்தில் சேவைகள், செயல்பாடுகளை அமைப்பது. அவற்றிற்கு திறந்த நியமங்களுடன் இடைமுகங்கள் அமைப்பது

இந்தப் படிமத்திலுள்ள ஏழு கட்டங்களாவன:

  • பயன்முறைக் கட்டம் (Application Layer 7)

  • தரவுக் குறிப்பீட்டுக் கட்டம் (Presentation Layer 6)

  • அமர்வுக் கட்டம் (Session Layer 5)

  • போக்குவரத்துக் கட்டம் (Transport Layer 4)

  • வலையமைப்புக் கட்டம் (Network Layer 3)

    • மடைமாற்றல் (Switching)

    • பாதை தெரிவு செய்தல் (Routing)

  • தரவு இணைப்புக் கட்டம் (Data Link Layer 2)

  • பருநிலைக் கட்டம் (Physical Layer 1)

உங்கள் இணைய தள

உங்கள் இணைய தளப் படங்களை பிறர் திருடாமலிருக்க செய்ய வேண்டியவை

பலரும் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் அவை சார்ந்த படங்களை இணைத்து இணைய தளங்களை அமைக்கிறார்கள். ஆனால் இந்த தளங்களைப் பார்க்கும் நேயர்கள் இவற்றில் உள்ள படங்களை அப்படியே காப்பி செய்து தங்களுடைய விருப்பப்படிப் பயன்படுத்துகிறார்கள். சிலர் அவற்றை மற்றவர்களுக்கு விற்று விடுகிறார்கள். சிலரோ அவற்றைக் கீழ்த் தரமாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த திருட்டை எப்படித் தடுப்பது? இது குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம். இணைய தளங்களில் பொருத்தப்பட்டு காட்சியளிக்கிற படங்களை காப்பி செய்ய முடியாதவாறு தடுக்க சில வழிகள் உள்ளன. உங்கள் வழிகளை மீறி படங்களைச் சாதாரண பயனாளர்களால் காப்பி செய்ய முடியாது. ஆனால் கம்ப்யூட்டர் விற்பன்னர்களால் காப்பி செய்ய முடியும்.

ரைட்கிளிக் செய்வதை தடுக்க:

பொதுவாக ஓர் இணைய தளத்தில் உள்ள படத்தால் ஈர்க்கப்பட்டவர் அதை காப்பி செய்ய அதை ரைட்கிளிக் செய்வார். மெனு கிடைக்கும். அதில் Save Image As என்பதைப் போன்ற கட்டளை தெரியும். அதை கிளிக் செய்தால், அந்தப் படம் அவர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். எனவே ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி, ரைட்கிளிக் செய்தால் மெனு கிடைக்காதவாறு செய்து விட வேண்டும். மெனு கிடைக்காததால் Save Image As கட்டளையை அவரால் செயல்படுத்த முடியாது. ரைட்கிளிக் செய்யும் பொழுது கிடைக்கிற மெனுவில் வேறு நல்ல பயனுள்ள கட்டளைகளும் உள்ளன. எனவே ரைட்கிளிக்கால் கிடைக்கிற மெனுவைத் தடுத்துவிட்டால், அந்த நல்ல கட்டளைகளை உங்கள் இணைய தளத்துக்கு வருபவர்களால், உங்கள் வெப் தளத்தில் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு எரிச்சல் ஏற்படும். மீண்டும் உங்கள் தளத்துக்கு வரமாட்டார்கள்.

வேறு படத்தை காப்பி செய்யும்படி ஏமாற்ற:

ரைட்கிளிக் செயலை ஜாவாஸ்கிரிப்ட் மூலம் தடுக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா? Rollover என்ற ஜாவாஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்த வேண்டும். யாரும் காப்பி செய்யக் கூடாது என நீங்கள் நினைக்கிற படத்தை வெப் பக்கத்தில் காட்டுங்கள். மவுஸை அந்த படத்தின் மேல் கொண்டு சென்றால் வேறு படம் தெரியும்படி, ஜாவாஸ்கிரிப்டில் Rollover கட்டளையில் கூறிவிடுங்கள். எனவே உங்கள் வெப் பக்கத்தை பார்வையிடுபவருக்கு அந்த படம் தெரியும். ஆனால் அதை காப்பி செய்ய மவுஸை அதன் மேல் கொண்டு போனால் அந்த படம் மறைந்து வேறுபடம் காட்சியளிக்கும். எனவே ரைட் கிளிக் மூலம் காப்பி செய்தால் அந்த புதிய படம்தான் அவர் கம்ப்யூட்டரில் காப்பியாகும். எப்போதும் உங்கள் படம்தான் தெரிய வேண்டும் மவுஸைக் கொண்டு போனவுடன் வேறு படம் தெரியக் கூடாது என நினைத்தால் அதற்கும் வழி உள்ளது. Transparent Gif படத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பிறகு Embedded style sheet மூலம் அந்த Transparent Gif படத்தின் கீழே உங்கள் படத்தை வைத்து விடுங்கள். உங்கள் படத்தின் மேலே கண்ணாடி காகிதம்போல் Transparent Gif வீற்றிருப்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாது. ரைட்கிளிக் செய்து படத்தை காப்பி செய்கிறவர்களுக்கு கண்ணாடி காகிதமான Transparent Gif படமே காப்பியாகும். அதன் கீழேயுள்ள உங்கள் படம் காப்பியாகாது.

படத்தைத் துண்டுகளாக மாற்றி வெப் தளத்தில் போட:

ஒரு படத்தை அப்படியே உங்களது இணையப் பக்கத்தில் வைக்காதீர்கள். அதைப் பல துண்டுகளாகப் பிரித்து அந்த துண்டுகளை வெப் பக்கத்தில் அமைத்திடுங்கள். எனவே உங்கள் படத்தை காப்பி செய்ய விரும்புகிறவர் அந்த துண்டுகளையெல்லாம் காப்பி செய்து பின்பு ஏதாவது இமேஜ் எடிட்டிங் புரோகிராம் கொண்டு அவற்றை ஒட்ட வைக்க வேண்டும். இந்த எரிச்சல் பிடித்த வேலைக்கு பயந்து அந்த துண்டுகளை காப்பி செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

படத்தினுள் வாட்டர் மார்க்கை நுழைக்க:

படத்தை அப்படியே வெப் பக்கத்தினுள் கொண்டு வரக்கூடாது. அந்த படத்தின் உள்ளே உங்கள் பெயர் அல்லது வேறு ஏதாவது எச்சரிக்கைச் செய்தியை வாட்டர் மார்க்காக நுழைத்து விட வேண்டும். படத்துக்கு இடையூறு இல்லாமல் ஆனால் படத்தை காப்பி செய்பவர்களுக்கு அது பயன்படாதவாறுவாட்டர் மார்க் இருக்க வேண்டும். ஏதாவது இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் கொண்டு வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். யார் கண்களுக்கும் தெரியாத வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். இதற்கெனவே சில சாப்ட்வேர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக Digimare (www.digimare.com) என்ற சாப்ட்வேர் மூலம் கண்ணிற்கு தெரியாத வாட்டர் மார்க்கை உங்கள் படத்தினுள் உருவாக்கலாம். வாட்டர் மார்க் தெரியாததால் எல்லாரும் உங்கள் படத்தை காப்பி செய்யலாம். ஆனால் அப்படி காப்பி செய்தவர்கள் மீது சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.

இணைய அமைப்பு

தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம்.

1. முகப்பு பக்க அளவு:

உங்கள் இணைய தளம் பதிக்கப்பட்டு சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரையில் அல்லது ஓராண்டு காலத்தில் உங்கள் தளத்தின் முகப்பு பக்கம் வழியாகத்தான் அனைவரும் நுழைவார்கள். (பொதுவாக இந்த முகப்பு பக்கத்தினை index.htm அல்லது default.htm என்று அழைப்பார்கள்.) எனவே இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். முகப்பு பக்கம் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அதனைக் காண விரும்புபவர்கள் எரிச்சல் அடைந்து ஆர்வம் குறைந்து தளத்தைக் காணும் முயற்சியைக் கைவிடுவார்கள். உங்களுடைய தளத்தினைப் பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் காண விரும்புவார்கள் எனில் இந்த முகப்பு பக்கத்தின் அளவு 90 கேபிக்குள் இருப்பது நல்லது. இதுவே இந்திய மக்கள் தான் காண்பார்கள் என்றால் 50 கேபி என்ற அளவிற்குள் இருப்பது நல்லது. இந்த அளவு எச்.டி.எம்.எல். வழி தகவல், பிளாஷ் மற்றும் அனிமேஷன் ஆகிய அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும்.

2. முதல் ஈர்ப்பு:

எந்த பொருளும் மக்களை முதல் பார்வையிலேயே கவர வேண்டும் என்பது பொதுவான ஒரு விஷயமாகும். இன்டர்நெட் தளத்தின் முகப்பு பக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே உங்களைப் பற்றிய தகவல்கள் நச் என்ற வகையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக அதே சமயத்தில் தளத்தின் உள்ளே சென்று பார்க்கும் வகையில் அமைய வேண்டும்.

3. நேரம்:

இப்போது பிளாஷ் தொகுப்பு உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதனைப் பார்ப்பவர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிப்பது நல்லதல்ல. இது அதிக நேரம் எடுக்கும். கட்டாயம் பிளாஷ் காட்சி ஒன்று தேவை என்றால் அதனை பார்வையாளர்கள் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுக்கும் வசதியும் தரப்பட்டிருக்க வேண்டும். வெறும் டெக்ஸ்ட் மட்டும் கூட அழகாக அமைக்கப்படலாம் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தளத்தைக் காண வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் தளத்திற்கும் பெருமை சேர்க்கும்.

4. தொடர்பு:

நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதனைக் காண்பவர்கள் உங்களிடம் சில விளக்கங்கள் வேண்டி உங்களைத் தொடர்பு கொள்ள எண்ணலாம். எனவே எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என முகப்பு பக்கத்திலேயே குறிப்பிட வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி அளிக்கலாம். அல்லது பார்ப்பவரின் கம்ப்யூட்டரில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராமை இயக்கி நேரடியாக மின்னஞ்சல் அனுப்பும் வசதியையும் ஏற்படுத்தலாம்.

5. புதுமை

ஆம் அதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணைய தளத்தை புதுப்பித்துக் கொண்டிருங்கள். அதற்காக அடியோடு அதனை மாற்ற வேண்டியதில்லை. சிறிய மாற்றங்கள் அவ்வப்போது இருப்பது உங்கள் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்கும்.

6. சரக்கு

ஆம் உங்கள் நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது உங்களின் தனிப்பட்ட தளங்களில் தகவல் சரக்கு நிறைய இருக்க வேண்டும். உங்கள் நிறுவனம் எந்தப் பொருளையேனும் தயாரிப்பதாக இருந்தால் அந்த பொருளைப் பற்றி மட்டுமின்றி உங்கள் நிறுவனம் அதன் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு பற்றியும் நிறைய தகவல்களை நீங்கள் தரலாம்.

7. மேம்பாடு

உங்கள் நிறுவனம் போல, உங்கள் அமைப்பு போல இயங்கும் மற்றவற்றின் இணைய தளங்களையும் நீங்கள் அடிக்கடி சென்று பார்த்து அவர்கள் செய்திடும் மாற்றங்கள், மேம்படுத்தும் தகவல்கள் ஆகியவற்றையும் கண்டறிந்து ஆய்வு செய்து உங்கள் தளத்தையும் அதே போல இல்லாமல் அதைவிடச் செறிவாக மேம்படுத்துங்கள்.

8. சோதனை

உங்கள் இணைய தளம் உங்களுக்குப் பிடித்த பிரவுசரில் மட்டும் சரியாக இயங்கக் கூடாது; மற்ற பிரவுசர்களிலும் மிகச் சரியாக இயங்க வேண்டும். அப்போது தான் அனைத்து தரப்பினரையும் உங்களால் கவர முடியும். அத்துடன் பல்வேறு ரெசல்யூசன் அமைப்பிலும் உங்கள் இணைய தளத்தைச் சோதனை செய்து பார்த்திட வேண்டும். வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயக்கிப் பார்த்திட வேண்டும்.

9. படங்கள்

நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இறங்குகின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறிய வேண்டும். வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்த படங்கள் எப்படி இறங்கி இயங்குகின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

10. சொல்லும் மொழி

உங்கள் மொழி நடையை ஸ்டைலாக அமைப்பதற்கு முன் அதில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழை இல்லாமல் இருப்பதனை ஒன்றுக்குப் பல முறை உறுதி செய்து கொள்ளுங்கள். தமிழ் மொழியில் உங்கள் தளத்தில் தகவல்கள் தரப்பட்டால் அந்த எழுத்துருவினை டவுண் லோட் செய்து கொள்ள வசதி செய்து தர வேண்டும். அந்த வசதி உள்ளது என்பதனை ஒரு ஜேபெக் பட பைலாகவோ அல்லது ஆங்கிலத்திலோ அமைக்கலாம்.

11. எழுத்துரு

அனைவருக்கும் தெரிந்த எழுத்துருக்களில் உங்கள் தகவல் தளத்தை அமைப்பது நல்லது. அப்போது தான் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் பழக்கப்பட்ட தளம் போல உங்கள் தளம் காட்சியளிக்கும்.

12. எளிதான தாவல்

உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்திலிருந்து தகவல்களுக்காக நேயரை மற்ற தளத்திற்கு இழுப்பது மிக எளிதான ஒன்றாக இருக்க வேண்டும். அவை உடனடியாக இறக்கம் செய்யப்படும் வகையில் தரப்பட வேண்டும். எந்த பக்கத்தில் இருந்தாலும் பிற பக்கங்களுக்குச் செல்வதற்கு எளிதான வழி அமைத்துத் தரப்பட வேண்டும்.

13. விளம்பரம்

உங்கள் இணைய தளம் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக விளம்பரங்களுக்கு இடம் தருவது தவறில்லை. ஆனால் அவை அளவுக்கு மீறி இடம் பெறக் கூடாது. இரண்டு விளம்பரங்களுக்கு மேல் இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கும்.

14. பாதுகாப்பு

இணைய தளத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் அதன் பாதுகாப்பு. உங்கள் இணைய தளத்தினுள் யாரும் நுழைய முடியாதபடி பாதுகாப்பு வளையங்களை அமைத்து அவற்றை அடிக்கடி மாற்றி மாற்றி அமைத்துவிட வேண்டும்.

கணனி பாகங்கள்

கணனி பாகங்களின் ஓர் அறிமுகம்

மதர்போர்டு (Mother Board):
CPUவில் எல்லா பாகங்களும் இணைக்கப்படும் அடிப்படையான சர்க்யூட் போர்டு. எல்லாவற்றிற்கும் தாய். தாயைப் போலவே ஊமையாக உழைக்க வேண்டும். கணனி தலைமைச் செயலகமான ப்ராஸஸர், பல்வேறு ப்ரோக்ராம்களை ஒரே சமயத்தில் திறக்க உதவும் மெமரி ஆகியவை இதன் மடியில் தான் தாலாட்டப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரைக் குறிப்பிடும் போது ப்ராஸஸர், ராம், ஹார்ட் டிஸ்க் பற்றியெல்லாம் பெருமையாக குறிப்பிடுவீர்கள். ஆனால் மதர் போர்டு?

மைக்ரோ ப்ராஸஸர்:
சுருக்கமாகச் சொன்னால் அரசன். முக்கியமான கணக்குகளைத் தானே போட்டு, எல்லாப் பாகங்களுக்கும் ஆணைகள் இட்டு செய்து முடிப்பவன்.

மெமரி (RAM):
ஓடிக்கொண்டிருக்கும் எல்லா ப்ரோக்ராம்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். அரசன் ஆணையிடும் போது தகவல்கள் அனுப்பும் மந்திரி.

ஹார்ட் டிஸ்க்:
கருவூலம் அல்லது நூலகம் என்று சொல்லலாம். இன்றைய விண்டோஸ் யுகத்தில் ஹார்ட் டிஸ்க் இல்லாத கணனி வைத்திருப்பவரை காதலி கூட சீண்ட மாட்டாள்! இதன் ஞாபகக் கொள்ளளவு ஒவ்வொரு இரண்டு வருடங்களில் இரட்டிப்பாவதாக கூறப்பட்டாலும். தற்போது அதைவிட வேகமாக கூடுவதாகத் தோன்றுகிறது.

கம்ப்யூட்டரில் உள்ள எல்லாப் ப்ரொக்ராம்களும் இந்த நூலகத்தில் தான் வைக்கப்படுகின்றது.

ப்ளாப்பி ட்ரைவ்:
ரொம்ப நாளாக (வருடங்களாக) கம்ப்யூட்டரில் மாறாமல் இருக்கும் ஒரே பாகம். உங்கள் கணக்குகளை கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாப்பியில் நகலெடுத்து பையில் வைத்துக் கொண்டு போகலாம். எல்லாக் கம்ப்யூட்டரிலும் போடும்படியாக இருக்க வேண்டும் என்பதால் இது மாறவே இல்லை. ஆனால் தற்போதைய அளவில் இதன் ஞாபகச் சக்தி மிகவும் குறைவு.

இதற்கு மாற்றாக 100MB கொள்ளளவு கொண்ட ஜிப் ட்ரைவ், MO டிஸ்க் ட்ரைவ் போன்றவை சந்தையில் இருந்தாலும் விலை அதிகமென்பதால் வீட்டு உபயோகத்திற்கு அதிகமாக வரவில்லை.

சிடி ட்ரைவ்:
ப்ளாப்பிக்கு கிட்டத்தட்ட சீப்பான மாற்றாக சிடி வந்துள்ளது. சாதாரண சிடி 675MB வரை கொள்ளும், விலையும் மிகக் குறைவு. வீட்டில் உபயோகிக்கும் சிடி ட்ரைவ்கள் சிடி-ரோம் ட்ரைவ்கள், அதாவது சிடியைப் படிக்க மட்டுமே முடியும் எழுத முடியாது. சிடியும் கூட ஒரு முறை எழுதினால் அழித்து எழுத முடியாது. ஆகவே ப்ரோக்ராம்களை விற்க வசதியான சாதனமாக உள்ளது. சினிமாக்களால் சிடியை அனைவரும் தற்போது அறிந்துள்ளனர்.

சிடி-ரோம் மட்டுமல்ல CD-W, CD-RW போன்ற வகைகளும் உள்ளன. CD-W(rite) ட்ரைவ் சிடியை எழுத உபயோகிக்கலாம். CD-RW (Rewrite) ட்ரைவில் சிடியை அழித்து மீண்டும் எழுதலாம். இதில் உபயோகிக்கும் சிடி சற்று வித்தியாசமானது, ஆனால் சாதாரண சிடி-ரோம் ட்ரைவில் உபயோகிக்க முடியும்.

மோடம்:
கம்ப்யூட்டரை டெலிபோனுடன் இணைக்கும் சாதனம். இதில் மற்ற பேக்ஸ் சாதனங்களுக்கு கம்ப்யூட்டரிலுள்ள பக்கங்களை பேக்ஸாக அனுப்பவும், பேக்ஸ் சாதனங்கள் அனுப்பும் பக்கத்தை பெறவும் முடியும். இண்டர்நெட் வீட்டிற்கு வரும் வழி.

Firewall

உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்கவேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள்கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலைமுழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும்வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.


இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைத் திருட முயற்சிக்கிறார்கள். அல்லது வைரஸ் புரோகிராம்களை அனுப்பி நம் கம்ப்யூட்டரில் நாசம் விளைவிக்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபடுவோர் எப்போதும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து செயல்படுகின்றனர்.


இவர்களிடமிருந்து நம் கம்ப்யூட்டரை மூன்று வழிகளில் பாதுகாக்கிறோம்.

1. வைரஸை அண்டவிடாமலும் அப்படி வந்துவிட்டால் அவற்றை நீக்கும் செயலையும் மேற்கொள்ளும் ஆண்டி வைரஸ் எனப்படும் புரோகிராம்கள்.

2. உள்ளே இது போன்ற எந்த நாசம் விளைவிக்கும் புரோகிராமினையும் புகவிடாமல் தடுக்கும் பயர்வால் புரோகிராம்கள்.

3.ஸ்பைவேர் அழித்தல்.

இந்த மூன்று வகை புரோகிராம்களும் இன்றைக்கு ஒரு கம்ப்யூட்டருக்குத் தேவை. இதன் முக்கியத்துவம் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். இங்கு பயர்வால்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்

உங்களுக்கும் இன்டர் நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.

பயர்வால் தொகுப்பைப் பொறுத்தவரை இரண்டு வகை உண்டு:ஹார்ட்வேர் பயர்வால் மற்றும் சாப்ட்வேர் பயர்வால்.


அதிகம் புழங்கப்படும் ஹார்ட்வேர் பயர்வால் ரௌட்டராகும் (router).ஒரு சிறிய நெட்வொர்க்கில் இது கம்ப்யூட்டருக்கும் மோடத்திற்கும் இடையே இணைக்கப்படும். உங்களுக்கு இன்டர்நெட் தொடர்பினைத் தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் உங்கள் கம்ப்யூட்டருக்கென ஒரு ஐ.பி. முகவரியினைத் தரும். இது தெரிந்தால் யாரும் இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் புகுந்து தகவல்களைத் திருட முடியும். இந்த ரௌட்டர் அதனை மற்றவர்களிடமிருந்து மறைத்து வேறு ஒரு முகவரியை இணைக்கப்பட்ட கம்ப்யூட்டருக்குத் தருகிறது. இதன் மூலம் கம்ப்யூட்டரில் எளிதாக நுழையக் கூடிய போர்ட்களை ரௌட்டர் மூடிவிடுகிறது.

சாப்ட்வேர் பயர்வால் சிறிது மாறாகச் செயல்படுகிறது. இதில் சில நன்மைகளும் உள்ளன; பிரச்னைகளும் உள்ளன. ஹார்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டருக்கு வெளியே அமைக்கப்படும் சாதனம். சாப்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம். எது எப்படி இருந்தாலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது ஒரு பயர்வால் கட்டாயம் தேவை.

சாப்ட்வேர் பயர்வால் உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக இயங்குகிறது. இதனால் நீங்கள் இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் புராசசர் வேகம் சற்று குறையலாம். சாப்ட்வேர் பயர்வால் ரௌட்டர் செய்வது போல ஐ.பி.முகவரி மாற்றம் எதனையும் மேற்கொள்ளாது. சாப்ட்வேர் பயர்வால் செயல்படுவது ஒரு நண்பரை வாட்ச்மேனாக வைத்திருப்பது போல.

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் எந்த புரோகிராமினை நாம் இன்டர்நெட்டில் தொடர்பு கொண்டாலும் உடனே சிறிய பாக்ஸ் ஒன்றை உருவாக்கி இந்த ஐ.பி. முகவரியிலிருந்து இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்திட முயற்சிக்கிறது. இதனை அனுப்பவா? என்று கேட்கும். நீங்கள் அனுமதித்தால் தான் அதனை அனுமதிக்கும்.

இது கெடுதலான புரோகிராமிற்கு மட்டுமல்ல. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் அனைத்து புரோகிராம்களுக்கும் இந்த செய்தி கிடைக்கும். ஒரு முறை ஒரு புரோகிராமினை அறிந்து கொண்டு அதனை நீங்கள் அனுமதிப்பதையும் பதிந்து கொண்டு அடுத்த முறை அதே வெப் சைட்டை நீங்கள் தொடர்பு கொள்கையில் உங்களைக் கேட்காமலேயே அனுமதிக்கும்படியும் இதனை செட் செய்திடலாம்.

வேறு எவராவது அவர்களின் புரோகிராம் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் திருட்டுத் தனமாக நுழைய முயற்சிக்கையில் இந்த ஐ.பி. முகவரியிலிருந்து ஒருவர் உங்கள் கம்ப்யூட்டருக்குள் முயற்சிக்கிறார் என்று எச்சரிக்கைச் செய்தியினை பயர்வால் வழங்கும். அப்படிப்பட்ட நேரத்தில் அதனைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த முகவரியிலிருந்து ஒருவர் என்னுடைய கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கிறார் என நீங்கள் தெரிவிக்கலாம்.

பயர்வால் என்பது இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் தேவயான ஒன்று. எனவே இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் பயர்வால் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது நல்லது. அல்லது நிறுவனங்கள் விற்பனை செய்திடும் பயர்வால் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பயர்வால் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு சிறிய அளவில் தான் இயங்குகிறது.

வைரஸ்

வைரஸ் என்றால் என்ன?
வைரஸ் எண்றால் உங்களுடைய எந்த அனுமதியுமின்றி, தயவு தாட்சான்யம் காட்டாமல் ஒரு கணனி நிகழ்ச்சி நிரலை உங்கள் கணனிக்குள் விட்டு, உங்கள் கணனியை செயலிளக்கசெய்தல். இது வளர்ந்து கொண்டேபோகும். இதன் வளர்ச்சியைத்தடுப்பதற்குத்தான் ஆந்தி வைரச் மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பலவித மனிதர்களால் எழுதப்பட்டு பின்பு சோதிக்கப்பட்டு அதன் பின்பு அவர்கலுக்கு எதிரானவர்களின் கணனியுக்குள்ளும், கணனி வலைகளுக்குள்ளும் ஏவிவிடப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண கணனி உபயோகிப்பவர்கள் தான்.

What is virus?
A program or piece of code that is loaded onto your computer without your knowledge and runs against your wishes. Viruses can also replicate themselves. All computer viruses are manmade. A simple virus that can make a copy of itself over and over again is relatively easy to produce. Even such a simple virus is dangerous because it will quickly use all available memory and bring the system to a halt. An even more dangerous type of virus is one capable of transmitting itself across networks and bypassing security systems.

Anti
வைரஸ் புரோகிராம் பதிந்து வைத்திருக்கும் பலர் திடீரென என் ஆன்டி வைரஸ் புரோகிராமினையும் மீறி சில வைரஸ்கள் வந்து என் பொழைப்பையே கெடுத்துருச்சே! என்று அங்கலாய்ப்பார்கள். இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்களே இப்படித்தான். வைரஸ்களை எதிர்த்து திடீரென வேலை செய்யாது என்று புலம்புவார்கள். நப்பாசையில் ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தி சோதித்துப் பார்ப்பார்கள்.

எந்த வைரஸும் இல்லை என்று செய்தி வந்தவுடன் நம் தலைவிதி அவ்வளவுதான் என்று கூறி டெக்னீஷியன் மூலம் வைரஸ்களைக் காலி செய்வார்கள் அல்லது இந்த புரோகிராம் சரியில்லை என்று வேறு ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமிற்குத் தாவுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது? என்று சற்றுப் பார்ப்போம். நீங்கள் என்ன செய்கிறீர்கள். நீங்களே அல்லது யார் மூலமாவது ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கிறீர்கள். அதுவும் அவ்வப்போது நீங்கள் இன்டர்நெட்டில் உலா வருகையில், இமெயில் இறக்குகையில், பிளாஷ் டிரைவ் பயன்படுத்துகையில் சிகப்பு கட்டத்தைக் காட்டி இதில் வைரஸ் இருந்தது. நான் கிளீன் செய்துவிட்டேன் என்று காட்டுகிறது. உங்களுக்கு சந்தோஷமோ சந்தோஷம்.

ஆனால் சிறிது நாட்கள் கழித்து கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது என்று தெரிகிறது. அப்போது தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள். இங்கு நீங்கள் செய்யத் தவறிய சில செயல்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்ப்போம்.

1. ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் அதை மறந்துவிடக் கூடாது. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை அப்டேட் செய்திட வேண்டும். அப்போதுதான் அண்மைக் காலத்தில் வந்த வைரஸ்களைக் கண்டறிவ தற்கான புரோகிராம்கள் டவுண்லோட் செய்யப்பட்டு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மேம்படுத்தப்படும். எனவே நீங்கள் ஸ்கேன் செய்வதாக இருந்தால் முதலில் இன்டர்நெட் இணைப்பு பெற்று உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று அப்டேட் செய்திடவும். அதன்பின் ஸ்கேன் செய்திடவும்.

2. முதலில் உங்கள் ஆண்டிவைரஸ் புரோகிராமினை எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம். வழக்கமாக டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் இதன் ஐகான் இருக்கும். இதனை டபுள் கிளிக் செய்தால் இந்த புரோகிராம் திறக்கப்படும். ஐகான் இல்லையா? ஸ்டார்ட் கிளிக் செய்து புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் பட்டியலில் ஆண்டி வைரஸ் புரோகிராமைக் காணலாம். அங்கு கிளிக் செய்திடலாம்.

3. இது திறந்தவுடன் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் மெயின் பக்கத்தில் நீங்கள் இருப்பதைக் காணலாம். இதில் இந்த புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏதுவான பிரிவுகள் இருக்கும். அனைத்தையும் பார்த்து ஸ்கேன் செய்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

4. ஸ்கேன் டேபைக் கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட டிரைவ் அல்லது அனைத்து டிரைவ்களையுமா எனத் தேர்ந்தெடுக்கும் வசதி கிடைக்கும். அனைத்து டிரைவ்களையும் அல்லது முழு கம்ப்யூட்டரையும் ஸ்கேன் செய்திடும் வசதியினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே ரிபோர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும். ஸ்கேன் முடிந்தவுடன் ஸ்கேன் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு கண்டறியப்பட்ட வைரஸ்கள், அவை இருந்த பைல்கள், வைரஸ் அழிக்கப்பட்டுவிட்டதா, காப்பு இடத்தில் (குவாரண்டைன்) வைக்கப்பட்டுள்ளதா என்று காட்டப்படும்.

இவற்றை அழிப்பதற்கான ஆப்ஷன் உங்களிடமே விடப்படும். அதே மெயின் விண்டோவிலேயே தொடர்ந்து தானாகக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாக ஸ்கேன் செய்திடும் பணியை செட் செய்திடவும் வாய்ப்பு தரப்படும். உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யப்படும் போதெல்லாம் ஸ்கேன் செய்திடும் வகையிலோ அல்லது வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறையோ ஸ்கேன் செய்திட செட் செய்திடலாம்.

5. ஆட்டோமேடிக் ஸ்கேன் செய்திட எப்படி செட் செய்வது எனப் பார்ப்போம். முதலில் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின் டூல்ஸ் (Tools) மெனு செல்லுங்கள். Scheduler என்பதைத் தேர்ந்தேடுங்கள். அதன்பின் Schedule Scan என்ற பிரிவிற்குச் செல்லுங்கள். (இந்த சொற்கள் சில ஆண்டி வைரஸ் புரோகிராமில் வேறு மாதிரியாக இருக்கலாம்) ஷெட்யூல் ஸ்கேன் தேர்ந்தெடுத்தவுடன் நியூ என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் வகையில் சில ஆப்ஷன்கள் காட்டப்படும். அவை Event Type, When To Do, How Often, Start Time எனப் பலவகைப்படும். இவற்றின் தன்மைக்கேற்ப உங்கள் முடிவுப்படி செட் செய்திடுங்கள். அனைத்தும் முடித்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இதன்பின் நீங்கள் செட் செய்த படி ஸ்கேன் தானாக நடைபெறும். கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் இல்லாமல் இயங்கிட எப்போதும் மேம்படுத்தப்பட்ட உயிர்த்துடிப்புள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம்களை வைத்திருக்கவும். நீங்கள் மறந்தாலும் அது தானாக இயங்கும்படி செட் செய்திடவும்.

கணனி

உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்கள் சில। அவையாவன
கோப்புக்களை அழிக்க முடியவில்லையா
கார்ட்டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில கோப்புக்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கணனி நடந்து கொள்ளும்.
கோப்புக்களை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் வரும்.
  1. அது ஒரு டொகுமெண்ட் கோப்பாகவோ
  2. இசை கோப்பாகவோ
  3. பட கோப்பாகவோ
இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.
  • சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும்.
  1. கார்ட்டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் கோப்புக்களை அழிக்க முயற்சிக்கிறீர்கள்.
  2. சில கோப்புகளுக்குள் இருக்கும் இந்த கோப்புக்களை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருப்பார் அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கும். அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.
எனவே உங்களின் கோப்பை அழிப்பதாக இருந்தால் அந்த கோப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்தவேண்டும் என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா?

கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் கோப்பை கணனியில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “பபுழு. txt” என்னும் கோப்பு பபுழுஎன்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ Papulu\
பபுழு. txt என்பது. கோப்பின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு கடதாசியில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கணனியை நிப்பாட்டிவிட்டு, திரும்பி ஒன் செய்திடுங்கள். கணனி பூட் ஆகும் போது F8 கீயை
கணனிப்பலகையிலிருந்து அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி DOS promptல் கணனி பூட் ஆகி நிற்கும். இனி DOS மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\ Papulu\பபுழு. txt என எழுதவும்
  1. இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.
  • எழுதி முடித்து என்டர் அழுத்தியவுடன் DOS துடிக்கும் புள்ளி உங்கள் கோப்பு உள்ள Directoryயில் சென்று நிற்கும்.
  • இனி del myessay.txt என எழுதி முடித்து என்டர் அழுத்தினால் நீங்கள் பல வழிகளில் அழிக்க முயன்று தோற்றுப் போன கோப்புகள் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கணனி உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். உங்கள் தலைவலி இதனுடன் நின்றது. நீங்கள் பல முயற்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும்
இதோ உங்களுக்கு இன்னுமோர் உன்னதமான மென்பொருள்

உங்கள் கணனியில்தேவையில்லாத
  1. இண்டெர்நெட் குக்கீஸ்
  2. தற்காலிக கோப்புகள்
  3. கோப்புகள்
  4. ரெஜிஸ்டரி
  5. மென்பொருட்கள்
இவை அனைத்தையும் எவ்வாறு நீக்கவேண்டும் என்ரு கவலையா? உங்களுக்காக CCLEANER இருக்கிறதே. CCLEANER இவற்றையெல்லாம் நீக்கி விடும். இங்கே ஒரு கிருமிநாசினிகளும் இல்லை. நீங்கள் பயப்படாம தரவிறக்கம் செய்யலாம். இது ஒரு இலவச மென்பொருள்

அதன் வலை விலாசம் http://www.ccleaner.com/ இங்கு போனால் இதை தரவிறக்கம் செய்யலாம்

It removes unused files from your system - allowing Windows to run faster and freeing up valuable hard disk space. It also cleans traces of your online activities such as your Internet history. Additionally it contains a fully featured registry cleaner. But the best part is that it's fast (normally taking less than a second to run) and contains NO Spyware or Adware!

டெஸ்க்டாப் டோபியா (DesktopTopia)
உங்கள் கணணியில் டெஸ்க்டாப்பில் வால்பேப்பர்கள் தானாகவே மாற்ற இது உதவும்

YouTube Downloader

இந்த மென்பொருள் மூலம் YouTube படங்களை தரவிறக்கி காண முடியும். இந்த மென்பொருள் இப்பொழுது YouTube மட்டும் இல்லாமல் டெயிலி மோசன், யாகூ வீடியோ போன்ற தளங்களையும் ஆதரிக்கிறது.

Launchy

எங்களுக்கு எப்போதுமே குறுக்கு வழிதான் பிடிக்குமே. இதோ வந்துவிட்டது Launchy. ஒரு சில கணனிப்பலகை இடுக்கைகளுடன் உங்கள் அன்றாட வேலைகள முடித்துவிடலாம். உங்கள் ஒருசில மணித்துளிகளை செலவு செய்து எங்கு இருக்கிறது எனது நிழற்படம், கோப்பு, Bookmarks என்று தேட வாய்ப்பில்லை. நீங்கள் சரியாகச்செய்யவேண்டும். இது ஒரு இலவச மென்பொருள். குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மூலம் பயன்பெறவும்.

Launchy is a free Windows and Linux utility designed to help you forget about your start menu, the icons on your desktop, and even your file manager.

Launchy indexes the programs in your start menu and can launch your documents, project files, folders, and bookmarks with just a few keystrokes!

எங்களில் பலபேரிடம் பலதரப்பட்ட படச்சுருள்கள், நாடாக்கள், பாட்டுக்க்ள் இருக்கின்றன. இவையனத்தையும் பார்த்து, கேட்டு ரசிப்பதற்கு பலதரப்பட்ட மென்பொருட்களை நாம் தேடி அலைந்து தரவிறக்கம் செய்யவேண்டும் அல்லது பணம் கொடுத்து வாங்கவேண்டும். இதோ உங்களுக்காக வந்து விட்டது VLC PLAYER.